கோவையில் விடற்றோர்களுக்கான புதிய காப்பகம் திறப்பு- எங்கே???

published 6 months ago

கோவையில் விடற்றோர்களுக்கான புதிய காப்பகம் திறப்பு- எங்கே???

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80-வது வார்டு கெம்பட்டி காலனி பகுதியில் கோவை மாநகராட்சி இடத்தில் BOSCH என்கிற தனியார் நிறுவனத்தின் முழு பங்களிப்புடன் (CSR FUND) 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 25 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற வீடற்றோர் காப்பகத்தின் இரண்டாம் தளத்தை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்,கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ஆகியோர் திறந்து வைத்து முதியோர்களிடம் நலம் விசாரித்தனர்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் வெற்றிசெல்வன்,பொது சுகாதாரக் குழு தலைவர் மாரிசெல்வன், BOSCH நிறுவன அலுவலர் நவேத்நாராயணன்,Helping Hearts தொண்டு நிறுவனம் கணேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

ஏற்கனவே முதல் தளம் திறக்கப்பட்டு அதில் முதியோர்கள் வசித்து வரும் நிலையில் தற்போது கூடுதலாக இரண்டாம் தளம் திறக்கப்பட்டது.முதல் தளத்தில் இருக்கும் முதியோர்களை பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe