கோவையில் வடிவேலு பட பாணியில் பைக் திருட்டு...!

published 2 weeks ago

கோவையில் வடிவேலு பட பாணியில் பைக் திருட்டு...!

கோவை: கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சபரி ஸ்ரீனிவாசன் (34). இவர் அங்குள்ள பழைய பைக் விற்பனை நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். 

நேற்று ஷோரூமில் சபரி ஸ்ரீனிவாசன் இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் டிப் - டாப் உடை அணிந்து வந்தார். சபரி ஸ்ரீனிவாசனிடம் கே.டி.எம். பைக் விலைக்கு வேண்டும் என கேட்டார். உடனே ஊழியர்கள் அவரிடம் அங்கு நின்ற விலை உயர்ந்த கேடிஎம் பைக்கை காட்டி நன்றாக இருக்கும் என்று கூறினார்.
 
உடனே அந்த வாலிபர் விலையை கேட்டு விட்டு பைக்கை ஓட்டி பார்க்க வேண்டும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து சபரி ஸ்ரீனிவாசன் அதற்கு அனுமதித்தார். சோதனை ஓட்டத்தின் போது கடை ஊழியர் நவீன் என்பவரை அவருடன் செல்லும்படி சபரி ஸ்ரீனிவாசன் கூறினார். 

இதற்கு சம்மதம் தெரிவித்த அந்த டிப் டாப் வாலிபர் நவீனை மோட்டார் பைக்கில் பின்புறம் ஏற்றிக்கொண்டு சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் வேகமாக சென்றார். டபுள்ஸ் சென்றால் நன்றாக உள்ளது, அதே போன்று தனியாக சென்று ஓட்டி பார்த்துவிட்டு சொல்கிறேன் எனக்கூறி நவீனை காமராஜர் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகில் இறக்கி விட்டார். நவீன் சரி என்று கூறிவிட்டு, அவரை செல்ல அனுமதித்தார். 

ஆனால் பைக்கை ஓட்டிச் சென்ற டிப் டாப் வாலிபர் அதன்பிறகு மீண்டும் திரும்பி வரவில்லை. அதன் பிறகு தான் சோதனை ஓட்டம் என்ற பெயரில் வாலிபர் பைக்கில் தப்பி சென்றது தெரியவந்தது. 

கோவையில் நடந்த இந்த நூதன திருட்டு குறித்து மேலாளர் சபரி ஸ்ரீனிவாசன் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து டிப்டாப் ஆசாமியை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe