கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு பறக்கும் முறுக்கு, சீடை..!

published 2 years ago

கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு பறக்கும் முறுக்கு, சீடை..!

 

கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானத்தில் முறுக்கு, சீடை, எண்ணை பொருட்கள் அதிகளவில் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது.

தொழில் நகரமான கோவையில் இருந்து, ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களாக ஏர் அரேபியா, ஏர்லைன்ஸ் சார்பில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்.

இந்த விமானத்தில் ஒவ்வொரு முறையும், சராசரியாக 3 டன் சரக்குகள் ஏற்றி செல்லப்படுவது வழக்கம். பொதுவாக, காய்கறிகள் அதிகளவு புக்கிங் செய்யப்படும்.

ஆனால் கடந்த சில நாட்களாக முறுக்கு, சீடை, சமையல் எண்ணை உள்ளிட்ட உணவு பொருட்கள் அதிகளவு புக்கிங் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை-ஷார்ஜா இடையே இயக்கப்படும் ஏர் அரேபியா விமானத்தில் கார்கோ பிரிவில் காய்கறிகள், என்ஜினீயரிங் பொருட்கள் மட்டுமே அதிகளவு ஏற்றி செல்லப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக முறுக்கு, சீடை, முறுக்கு மாவு, தேங்காய்
எண்ணை, கடலை எண்ணை உள்ளிட்ட பொருட்கள் மிக அதிகளவு புக்கிங் செய்யப்பட்டு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது.

குறிப்பாக முறுக்கு மாவு ஒவ்வொரு முறையும் 80 கிலோ மற்றும் அதற்கு மேல் கொண்டு செல்லப்படுகிறது. வரும் நாட்களில் பூக்களும் அதிகளவு புக்கிங் செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த நிலவரம் ஓணம் பண்டிகை முடியும் வரை தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe