கோவையில் பாடலை சத்தமாக வைத்து கேட்ட விவகாரம்- இளைஞர் கொலை- திருமண இல்லத்தில் சோகம்...

published 1 week ago

கோவையில் பாடலை சத்தமாக வைத்து கேட்ட விவகாரம்- இளைஞர் கொலை- திருமண இல்லத்தில் சோகம்...

கோவை: கோவை கெம்பட்டி காலணி பகுதியை சேர்ந்தவர் கோகுல்கிருஷ்ணன் (24). இவர் செட்டிவீதி பகுதியில் தங்க நகை  செய்கின்ற தொழில் செய்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு கோகுல்கிருஷ்ணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி,  போதையில் அசோக் நகர் பாலாஜி அவன்யூ பகுதியில் வந்து கொண்டு இருந்த நிலையில், அந்த பகுதிக்கு வந்த நாகராஜ், பிரவீன்குமார், சூர்யா, சந்துரு மற்றும் சஞ்ஜய், ஆகியோர் கோகுலிடம் முன் விரோதம் காரணமாக தகறாரில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

இதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நாகராஜ், பிரவீன்குமார், சூர்யா, சந்துரு மற்றும் சஞ்ஜய் தரப்பினர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் கோகுலை குத்தி விட்டு தப்பி உள்ளனர். இதில் இரத்தம் சொட்ட, சொட்ட கோகுல் சிறிது தூரம் நடந்து சென்று மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர் செல்வபுரம் போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார் கோகுலின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கு காரணமான நாகராஜ், பிரவீன்குமார், சூர்யா, சந்துரு மற்றும் சஞ்ஜய் ஆகியோரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில நாட்களுக்கு முன்பு கோகுல்கிருஷ்ணன் உறவினரான தனசேகர் எனபவரிம் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சிவகுமார் என்பவர் சத்தமாக பாடலை கேட்டதாகவும் இது குறித்து தனசேகர் கேட்டபோது சிவசங்கர்,  மற்றும் பிரவீன் ஆகியோர் தகராறு ஏற்பட்டதாகவும் அதில் கோகுல்கிருஷ்ணன் தலையிடவே கோகுல்கிருஷணனையும் திட்டி கொலை மிரட்டல் விட்டுள்ளனர். 

இந்த பிரச்சினை அப்போதைக்கு சமரசம் செய்யப்பட்ட நிலையில் இரு தரப்பினரும் பகையில் இருந்துள்ளனர். 
இந்த சூழலில் நேற்று முன் தினம் இரு  இரு தரப்பினரும் மோதி கொண்ட நிலையில் இக்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதே சமயம் கோகுல்கிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியாமல் நேற்று கோகுல்கிருஷ்ணனின் அண்ணனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe