மிலாது நபி- கோவையில் பொதுமக்கள் 40,000 பேருக்கு தயாரான மட்டன் பிரியாணி...

published 5 months ago

மிலாது நபி- கோவையில் பொதுமக்கள் 40,000 பேருக்கு தயாரான மட்டன் பிரியாணி...

கோவை: இறை தூதர் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.  அதன்படி இன்று கோவையில் பொதுமக்கள் 40,000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்குவதற்காக தயாராகி உள்ளது.

இதில் 400-க்கும் மேற்பட்ட ஆடுகள், 2500 கிலோ க்கும் மேற்பட்ட பிரியாணி அரிசி,டன் கணக்கில் தக்காளி, கருவேப்பிலை,கொத்தமல்லி போன்ற உணவுப் பொருட்களைக் கொண்டு 250 ராட்சச  பாத்திரங்களை கொண்டு 300-க்கு மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பிரியாணி சமைக்கப்பட்டது.
 

தொடர்ந்து இன்று காலை பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர்கள் உக்கடம்,ஜி.எம் நகர்,கோட்டைமேடு,கரும்புக்கடை ஆகிய பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இலவசமாக பிரியாணிகள் வழங்க உள்ளனர்.

முன்னதாக மிலாது நபி பண்டிகையொட்டி பள்ளி வாசலில் சிறப்பு தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe