நிபா வைரஸ் பரவல் - கோவை கேரளா சோதனை சாவடிகளில் மருத்துவ குழுவினர் சோதனை…

published 5 months ago

நிபா வைரஸ் பரவல் - கோவை கேரளா சோதனை சாவடிகளில் மருத்துவ குழுவினர் சோதனை…

கோவை: கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக வாலிபர்  உயிரிழந்ததை அடுத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் கேரளா எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி கோவை கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள

"வாளையார் -  வேலந்தாவளம் - மேல்பாவி - முள்ளி மீனாட்சிபுரம் - கோபாலபுரம் - வீரப்ப கவுண்டனூர் -  நடுப்புனி - ஜமீன்காலியாபுரம் - வடக்காடு - செம்மனாம்பதி" -

உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளில் மருத்துவ சுகாதார துறையினர் சிறப்பு தற்காலிக முகாம்களை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் கார் - பஸ் -  உள்ளிட்ட வாகனங்களில் வருவோரிடம் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என கேட்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்த மாவட்ட சுகாதார அதிகாரி அருணா தகவலாக கூறியதாவது.

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதை அடுத்து

கோவை மாவட்டத்தில் உள்ள 13"சோதனை சாவடிகளிலும் சுகாதாரக் குழுவினர் நியமிக்கப்பட்ட 24"மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது உள்ளனர்.

மேலும் அனைத்து அரசு மற்றும்  தனியார்  மருத்துவமனைகளிலும் நிபா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே அறிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe