கோவையில் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணி...

published 1 day ago

கோவையில் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணி...

கோவை: கோவையில் கருஞ்சட்டை பேரணியுடன் பெரியாரின் 146வது பிறந்தநாள் கொண்டாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் விழா இன்று கோவையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முற்போக்கு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணி நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்து பார்வையாளர்களை கவர்ந்தது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேரணியை துவக்கி வைத்து, சமூக நீதிக்கான பெரியாரின் போராட்டத்தை நினைவுகூர்ந்தார். காந்திபுரம் தந்தை பெரியார் சிலை முன்பு தொடங்கிய பேரணி 2 கிலோமீட்டர் தூரம் சென்று, சிவானந்தா காலனியில் நிறைவு பெற்றது. 

பேரணியில் கலந்து கொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷணன், பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி என்றும், சாதி, பாலினம் போன்ற அடிப்படையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடினார் என்றும் பேசினார். 

பேரணியின் முடிவில், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்வேறு முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe