21-வது கால்நடை கணக்கெடுப்புத் திட்டம்- கால்நடை வைத்திருப்பவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு...

published 4 months ago

21-வது கால்நடை கணக்கெடுப்புத் திட்டம்- கால்நடை வைத்திருப்பவர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு...

கோவை: கால்நடை கணக்கெடுக்கும் பணி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசின் சார்பில் கால்நடை பராமரிப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கால்நடைகள் தொடர்பான வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கால்நடைகளின் நலம் பேணுவதற்கு, சரியான தரவுகள் தரும் பொருட்டு கால்நடை கணக்கெடுப்பு பணியானது ஐந்து ஆண்டுக்ளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் வீடுகள், கடைகள் தோட்டம், பண்ணைகளில் உள்ள மாடு, எருமை, ஆடு, குதிரை, நாய், பன்றி, கோழி, வாத்து போன்ற அனைத்து வகையான கால்நடைகளும் கணக்கெடுக்கப்படும்.

இந்த கால்நடை கணக்கெடுப்பு இதற்காக
உருவாக்கப்பட்ட செயலில் கைபேசி மூலம் எடுக்கப்படும். தற்பொழுது நாடு தழுவிய 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணியானது அக்டோபர்-2024ஆம் மாத ஆரம்பத்தில் தொடங்கப்பட உள்ளது.

இப்பணிக்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் 234 கணக்கெடுப்பாளர்களும், கணக்கெடுப்பாளர்களின் பணியை கூராய்வு செய்ய 48 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு இத்திட்டப்பணி தொடர்பான பயிற்சிகள் பல்வேறு நிலைகளில் வழங்கப்பட்டுள்ளன.

அக்டோபர் மாத ஆரம்பத்தில் தொடங்கவிருக்கும் கால்நடை கணக்கெடுப்புப்பணி குறித்த விவரங்களை சேகரிக்க வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு பொதுமக்கள் தங்களது ஒத்துழைப்பை நல்ல முறையில் அளித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe