கோவையில் லாவகமாக பைக் திருட்டு- இருவர் கைது- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

published 4 months ago

கோவையில் லாவகமாக பைக் திருட்டு- இருவர் கைது- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

கோவை: கோவையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருடு போவது அதிகரித்து வருகிறது. இது குறித்து கோவையில் பல்வேறு காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்து வருகின்றனர். 

இந்த நிலையில் கோவை ராமநாதபுரம், பெரியார் நகர் பகுதியில் இரண்டு நபர்கள் ஒரு வாகனத்தில் வந்து சாலையோரம் நிறுத்தி வைத்து இருந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த  கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. 

இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது. சந்தேகத்திற்கு இடமாக வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த நவ்புல் ரஹ்மான், மற்றும் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த முகம்மது சப்வான் என்பது தெரியவந்தது. 

மேலும் இதில் நவ்புல் ரஹ்மான் என்பவர் காலையில் பிரியாணி கடையில் வேலை பார்த்து விட்டு இரவு இருசக்கர வாகன திருடில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது உள்ளது. மேலும் இவர்களிடம் இருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/tnZLAjdqvW0?si=Z_n9V8GTONq2sLVW

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe