கோவையில் இரண்டு தினங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் இன்று கனமழை...

published 2 weeks ago

கோவையில் இரண்டு தினங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் இன்று கனமழை...

கோவை: தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாகவே கனமழை பெய்து வந்த நிலையில் கோவை மாவட்டத்திலும் கனமழை பெய்தது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்தாலும் கோவை மாவட்டத்தில் இரண்டு தினங்களாக மழை ஓய்ந்து வெயில் அடித்து வந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. கோவை புறநகரில் தொண்டாமுத்தூர் தடாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் கோவை மாநகரில் உக்கடம், ராமநாதபுரம், சுங்கம், ரயில் நிலையம், காந்திபுரம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக இராமநாதபுரம் சிக்னல் அருகே முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியதால் பள்ளி மாணவர்கள், வேலை முடிந்து வீடு திரும்பும் பணியாளர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe