காங்கிரஸில் இருந்து மயூரா ஜெயக்குமாரை நீக்க கோவையில் தீர்மானம்- கட்சிக்குள் உட்கட்சி பூசல்?

published 2 weeks ago

காங்கிரஸில் இருந்து மயூரா ஜெயக்குமாரை நீக்க கோவையில் தீர்மானம்- கட்சிக்குள் உட்கட்சி பூசல்?

கோவை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்,உறுப்பினர் பொறுப்பிலிருந்து மயூரா ஜெயகுமாரை நீக்க வேண்டும் என கோவை காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றினார்கள். மயூரா ஜெயகுமார் இளைஞர் காங்கிரஸ் தலைமை,காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர்,தேசிய அளவில் செயலாளர் பொறுப்புகளில் அமர்ந்து அங்கம் வகித்து வருகிறார்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாக தலையீடு மட்டுமின்றி, மூத்தவர்களை அரவணைத்து செல்லாமல் கட்சியை பின்னுக்கு தள்ளி இருப்பதாக,காங்கிரஸ் கட்சியினரே பகீர் புகார் தெரிவித்திருக்கின்றனர். உட்கட்சி பூசலாக இருந்த நிலையில் பூதாகரமாக வெடித்தது.

கோவையில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவு முதன்மை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் கூட்டம் கூட்டி மயூரா ஜெயக்குமாரை கட்சியிலிருந்து நீக்க கோரி தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றனர்.

மயூரா ஜெயகுமாருக்கு எதிராக தீர்மானங்கள், 

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் மயூரா ஜெயக்குமார் அவர்கள் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அவருடைய உதவியாளராக இருந்து வந்த கருப்புசாமி அவர்களை நியமித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியை அவருடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். 

மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் (A.L.C.C) 4. உறுப்பினர்களில் 3 உறுப்பினர்களை புறக்கணித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினர்கள் 13 பேரில் & உறுப்பினர்களை ஒதுக்கி வைத்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில நிர்வாகிகள் 10 நிர்வாகிகளில் 9 பேரை புறக்கணித்தும், கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேரில் பலரை ஒதுக்கி வைத்தும், கோவை மாவட்டத்தில் உள்ள சர்க்கிள் டிவிஷன்களில் அதிக உறுப்பினர்களை சேர்த்த உண்மை தொண்டர்களை புறக்கணித்தும், கட்சியின் மீது ஈடுபாடு இல்லாத நபர்களை அந்த பதவிக்கு நியமித்தும், காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிராகவும், தலைவர் ராகுல் காந்திக்கு துரோகம் விளைவிக்கும் செயல்களை அரங்கேற்றி வருவது மட்டுமல்லாமல், கோவை மாநகராட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

மேலும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 2011, 2010 மற்றும் 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 3-முறை போட்டியிட்டும் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தார். இந்த தோல்விகள் மூலம் அவர் ஒரு வெகுஜனவிரோதி என்பது தெளிவாகிறது. கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அகில இந்திய செயலாளர் என்கிற அதிகார மமதையில் முற்றிலும் முடக்கி அதிகார துஷ்பிரயோகம் செய்துவரும் வரும் மயூரா ஜெயக்குமார் அவர்களை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கி, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு வித்திடுமாறும், முடங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வழிவகை செய்யுமாறு, இந்த கூட்டம் ஒருமனதாக தீர்மானித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை பணிவோடு கேட்டுக்கொள்கிறது.

மயூரா ஜெயக்குமாரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய பிறகு காங்கிரஸ் கட்சியினர், மயூரா ஜெயக்குமார் கட்சி பின்னுக்கு செல்கிறது. கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றார்.சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியின் நிர்வாக பொறுப்புக்கு தன்னைச் சார்ந்தவர்களை நியமித்திருக்கின்றார். மூத்தவர்களை அரவணைத்து செல்வதில்லை. பிரச்சாரத்திற்கு முறையாக அழைப்பதில்லை . நாட்டில் சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் கட்சியில் சுதந்திரமாக நிர்வாகிகள் தொண்டர்கள் செயல்பட வேண்டும்.

இந்த நிலையிலே, காங்கிரஸ் கமிட்டியின் வீரியமான செயல்பாடுகளை தடுக்கும் மயூரா ஜெயக்குமாரை கட்சி பொறுப்பு, உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe