தங்கம் விலை திடீர் சரிவு; நம்பலாமா... கூடாதா?

published 4 weeks ago

தங்கம் விலை திடீர் சரிவு; நம்பலாமா... கூடாதா?

கோவை: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதிரடியாக விலை சரிவைச் சந்தித்து வந்தன.

மிகக்குறுகிய காலமே விலை சரிவு இருந்த நிலையில், தற்போது தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த, 14ம் தேதி ரூ.7,120க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம்,  நேற்று ரூ.7,300க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,760 விலை அதிகரித்து விற்பனையானது.

இதனிடையே இன்று ஒரு பவுனுக்கு ரூ.440 விலை குறைந்தது; 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,285க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.58,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 கிராம் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.6010க்கும், ஒரு பவுன் ரூ.48,080க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலைக்கு ஏற்ப வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று சரிவைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் ரூ.112க்கு விற்பனையான வெள்ளி இன்று ரூ.2 விலை குறைந்து, ரூ.110க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நம்பலாமா கூடாதா?

இந்தியாவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை சரிவு தொடர வேண்டும் என்றால் தங்கத்தின் மீதான ஈர்ப்பு குறைந்து, முதலீடுகள் குறைய வேண்டும். அப்போது தான் தங்கம் விலை தொடர் சரிவை சந்திக்க வாய்ப்பு அதிகம். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe