கோவையில் நடத்தப்பட்ட உணவு பாதுக்காப்பு துறை சோதனை- ஆயிரக்கணக்கான லிட்டர் எண்ணெய் பறிமுதல்...

published 3 weeks ago

கோவையில் நடத்தப்பட்ட உணவு பாதுக்காப்பு துறை சோதனை- ஆயிரக்கணக்கான லிட்டர் எண்ணெய் பறிமுதல்...

கோவை: வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக இனிப்புகள் கார பலகாரங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

436 இனிப்பு,காரம் தயாரிக்கும் இடங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது 306 கிலோ அதிக வண்ண நிறங்கள் சேர்க்கபட்ட,தரமற்ற இனிப்பு கார வகைகள் பறிமுதல் செய்து அழித்தனர். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைகளுக்கு பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் 57 உணவு மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.32 கடைகளுக்கு நோட்டிஸ் வழங்கிய உணவு பாதுக்காப்பு அதிகாரிகள் பலமுறை பயன்படுத்தப்பட்ட 1,780 லிட்டர் எண்ணெயை பறிமுதல் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe