Breaking: கோவையில் தனியார் பள்ளியில் ராகிங்; 6ம் வகுப்பு மாணவர் காயம்!

published 1 week ago

Breaking: கோவையில் தனியார் பள்ளியில் ராகிங்; 6ம் வகுப்பு மாணவர் காயம்!

கோவை: கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சக மாணவர் ராகிங் செய்து, தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, அவினாசி சாலையில் ஸ்டேன்ஸ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மாலை பள்ளி முடியும் போது, பிளஸ் 1 மாணவர் ஒருவர், 6ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை தனது காலில் விழ வைத்து ராகிங் செய்து கொண்டு இருந்தார்.

இதை 6ம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவர் பார்த்து, ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். ஆசிரியர்கள் அந்த பிளஸ் 1 மாணவரை அழைத்து வரக்கூறியதாகத் தெரிகிறது. இதனை அந்த 6ம் வகுப்பு மாணவர், பிளஸ் 1 படிக்கும் மாணவரிடம் தெரிவித்துள்ளார்.
 

கோவை செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள, வாட்ஸ் ஆப் குழுவில் இணையலாம் அல்லது, சேனலை பின் தொடரலாம்: NewsClouds Whatsapp group அல்லது Whatsapp Channel  

அதைக்கேட்டு ஆத்திரமடைந்த அந்த பிளஸ் 1 மாணவர். நீ எப்படி ஆசிரியர்களிடம் சென்று கூறலாம்? எனக் கூறி,  6ம் வகுப்பு மாணவரின் கழுத்தைப் பிடித்து, தலையை அங்கு உள்ள ஒரு மரத்தில் ஓங்கி அடித்தார். அத்துடன் டிபன் பாக்ஸ் கொண்டும் தாக்கியதாகத் தெரிகிறது.

காயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கல்லூரிகளில் ராகிங் நடந்து வந்த நிலையில், தற்போது பள்ளியிலே ராகிங் நடைபெற்ற சம்பவம் பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe