குவிந்த தங்கம், வெள்ளி... 35 நாட்களில் மருதமலை உண்டியல் வசூல் என்ன தெரியுமா?

published 1 week ago

குவிந்த தங்கம், வெள்ளி... 35 நாட்களில் மருதமலை உண்டியல் வசூல் என்ன தெரியுமா?

கோவை: கோவை மருதமலை சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நிறைவடைந்துள்ளது.

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோயிலில், அறுபடை வீட்டிற்கு நிகராக வழிபாடுகள் நடத்தப்படுவதும், பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதும் வழக்கம்.

"மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க...தீராத வினையெல்லாம் தீந்து போகும்ங்க" என்று பாடல் பாடும் அளவுக்கு புகழ்பெற்று விளங்கும் இந்த மலைக் கோயிலில் கடந்த 25ம் தேதி உண்டியல் எண்ணும் பணிகள் தொடங்கியது.

உண்டியல் எண்ணும் பணிகள் திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜெயகுமார், துணை ஆணையர்/செயல் அலுவலர் செந்தில்குமார், ஈச்சனாரி, அருள்மிகு விநாயகர் திருக்கோயிலின் உதவி ஆணையர்/செயல் அலுவலர் நாகராஜ், அறங்காவலர்கள் மகேஷ்குமார். பிரேம்குமார். ஆ.கனகராஜன், சுகன்யாராசரத்தினம், பேரூர் சரக ஆய்வாளர் மகேஸ்வரி திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

கடந்த 35 நாட்களுக்கு பிறகு உண்டியல்கள் எண்ணப்பட்டதில், நிரந்தர உண்டியலில் ரொக்கமாக ரூ.47.16 லட்சமும், திருப்பணி உண்டியலில் ரூ.1.57 லட்சமும் காணிக்கையாக பெற்றப்பட்டுள்ளது.

இதுதவிர, 102 மி.கி தங்கம், 1.349 கிலோ வெள்ளி, 2.553 கிலோ பித்தளையும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe