கோவையில் MSME வாங்குவோர் விற்போர் சந்திப்பு துவக்கம்...

published 1 day ago

கோவையில் MSME வாங்குவோர் விற்போர் சந்திப்பு துவக்கம்...

கோவை: கோவை, கொடிசியாவில் MSME வாங்குவோர் விற்போர் சந்திப்பை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.

கோவை, கொடிசியா வளாகத்தில் சிறு, குறு தொழில் துறை சார்பில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு நிகழ்வு இன்று துவங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.
 

நிகழ்வில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறு, குறு தொழில்கள் அடித்தளமாக இருப்பதாகவும், முதலமைச்சரின் உழைப்பாலும் திட்டங்களாலும் தொழில் துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 9.25 சதவீதமாக உள்ளதாகவும், நடப்பாண்டில் மின்சார வாகனங்கள், மெட்ரோ கெமிக்கல் போன்ற வளர்ந்து வரும் துறைகளின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற நகரங்களில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 

மேலும், 2030 ல் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் முதலமைச்சரின் கனவை நனவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பில் ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 28 கொள்முதல் செய்பவர்களும், தமிழ்நாட்டில் இருந்து 250 க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் முனைவோரும் பங்கேற்று உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe