கோவையில் அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சி...

published 2 days ago

கோவையில் அஞ்சல்தலை சேகரிப்பு கண்காட்சி...

கோவை: இந்திய அஞ்சல் துறை சார்பில் கோவை மாவட்ட அளவிலான அஞ்சல் தலைகள் சேகரிப்பு கண்காட்சி கோவைபெக்ஸ்-2024 பீளமேடு பகுதியில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் இன்று துவங்கியது.

இக்கண்காட்சியினை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்து சிறப்பு தபால் உறை, புகைப்படங்கள் அட்டை மற்றும் அஞ்சல் தலைகளை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் அஞ்சல் துறை தலைவர் சரவணன், செயலாளர் நாராயணசாமி, கோயம்புத்தூர் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் மற்றும் அஞ்சல் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கண்காட்சியின் முதல் நாளான இன்று 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 2000 மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு, வரலாற்று சிறப்புமிக்க அஞ்சல் தபால் தலைகளை பார்வையிட்டனர்.

இரண்டு நாள் நடைபெறும் இக்கண்காட்சியினை பார்வையிடுவதற்கு அனுமதி இலவசமாகும். கோவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இதனை ஆர்வமாக பார்வையிட்டு வருகின்றனர்.

இன்றைய நிகழ்வில், கோவைபெக்ஸ் - 2024 சிறப்பு தபால் உறை, சூழலியல் விஞ்ஞானி டாக்டர் சலீம் அலி சிறப்பு தபால் உறை உள்ளிட்ட நான்கு சிறப்பு தபால் உறைகளும், புகைப்பட அஞ்சல் அட்டைகளும் வெளியிடப்பட்டன.

மேலும், சுயாதீன தபால்தலை ஆர்வலர்கள் சார்பில் சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு சிறப்பு தபால் தலைகளும் பல்வேறு நாடுகளின் நாணயங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe