கோவையில் அரசு இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வான பழங்குடி மாணவரிடம் பன்மடங்கு கட்டணம் கேட்கும் கல்லூரி நிர்வாகம்- மாவட்ட ஆட்சியரிடம் மனு...

published 2 weeks ago

கோவையில் அரசு இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வான பழங்குடி மாணவரிடம் பன்மடங்கு கட்டணம் கேட்கும்  கல்லூரி நிர்வாகம்- மாவட்ட ஆட்சியரிடம் மனு...

கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இவர், குஞ்சபனை அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். 

12ம் வகுப்பில் 600க்கு 489 மதிபெண் பெற்றுள்ள இவர் அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் கோவை ரத்தினம் கல்லூரியில் பிசியோதெரபி படிக்க தேர்வாகி இருக்கிறார்.

இந்நிலையில், இன்று கல்லூரிக்குச் சென்றபோது, இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தினால் மட்டுமே கல்லூரியில் சேர முடியும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாக தெரிகிறது. ஆனால்  30,000 ரூபாய் மட்டுமே கட்டணமாக அரசு நிர்ணயத்துள்ளது.

இந்நிலையில், தன்னிடம் அதிக தொகையை கல்லூரி நிர்வாகம் கட்டணமாக செலுத்தும் படி கேட்பதாகவும் வறுமையில் வாழ்ந்து தங்கள் குடும்பத்தால் அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது என்றும்  மேற்கல்வியை தொடர உதவுமாறு கோவை மாவட்ட ஆட்சித் ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe