கோவையில் 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்- விவரங்கள் இதோ...

published 1 week ago

கோவையில் 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்- விவரங்கள் இதோ...

கோவை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள குறிப்பில்,  தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதியான டவுன் ஹால் மற்றும் காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இன்று முதல் 30-ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஒப்பணக்கார வீதி வழியாக காந்திபுரம்,அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை செல்லும் கனரக வாகனங்கள் உக்கடம் சந்திப்பில் இருந்து சுங்கம் வழியாகவும் ஒப்பணக்கார  வீதியிலிருந்து மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் உக்கடம் சந்திப்பில் இருந்து பேரூர் புறவழிச் சாலை வழியாக காந்தி பார்க் செல்ல வேண்டும்.

கிராஸ்கட் ரோடு வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் 100 அடி சாலை வழியாக செல்ல வேண்டும் எனவும் மேலும் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம்,திருப்பூர்,ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் பார்க் கேட்,எல்ஐசி, அண்ணா சிலை வழியாக செல்ல வேண்டும்.

ஒப்பணக்கார வீதி மற்றும் ராஜவீதி பகுதியில் பொருட்கள் வாங்கும் பயணிகள் ஏற்றவர் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகள் வைசியள் வீதி ராஜவீதி வழியாக ஒப்பணக்கார வீதி வந்து பயணிகளை இறக்கி விட வேண்டும் என்றும் மேலும் கிராஸ்கட் ரோடு மற்றும் நஞ்சப்பா ரோடு பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe