RTI குறித்து மேல்முறையீடு செய்வேன்- கோவையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி தெரிவிப்பு...

published 2 weeks ago

RTI குறித்து மேல்முறையீடு செய்வேன்- கோவையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி தெரிவிப்பு...

கோவை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் RTI சேவைக்கான இணைய சேவையை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்- பத்து ரூபாய் இயக்கத்தின் கோவை மாவட்ட பொறுப்பாளர் சவுடமுத்து வலியுறுத்தி உள்ளார்.

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி சவுடமுத்து. இவர் பத்து ரூபாய் என்கின்ற இயக்கத்தில் கோவை மாவட்ட பொறுப்பாளராக பதிவி வகித்து வருகிறார். இந்நிலையில் RTI குறித்து செய்தியாளர்களை சந்திக்கையில்,  கடந்த 2005-ஆம் ஆண்டு இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், எழுத்துப்பூர்வமாக  மின்னணுவாயிலாக கேட்கப்படும் பொதுமக்களின் கேள்விகளுக்கு தகவல்களை அரசு அதிகாரிகள் வழங்க வேண்டும் என்று RTI யில் கூறியிருப்பதாகவும்   மத்திய அரசு மற்றும் மற்ற மாநில அரசுகள் இணைய வழியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட சேவையை சிறப்பாக வழங்கி வருவதாகவும் அதே சமயம், தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட https://rtionline.tn.gov.in‌ என்ற இணையதளமானது முழுவதுமாக இன்றும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்றார்.

இது தொடர்பாக 04.07.2024 தேதி, வருவாய் நிர்வாக ஆணையர் ஆணை பிறப்பித்ததாகவும் அதில், மாவட்ட ஆட்சியரின் கீழ் இயங்கக்கூடிய அனைத்து துறைகளிலும் உள்ள பொது தகவல் அலுவலர்களுக்கு உடனடியாக பயனாளர் குறியீட்டை ஏற்படுத்தி இந்த சேவையை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்ட அவர், அந்த வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏறக்குறைய 75 பொது தகவல் அலுவலர்களுக்கு பயனாளர் குறியீடு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறினார். மற்ற மாவட்டங்களில் இன்னும் இந்த சேவை செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில், 04.07.2024 தேதி வெளியான அரசாணையை குறிப்பிட்டு, இணைய சேவை ஏன் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இந்த இணைய சேவையை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், மனுவிற்கான பதில் அளிக்கப்படவில்லை என்றால் மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe