கோவையில் அமைய உள்ள இராணுவ தளவாட தயாரிப்புகள்- ஆய்வு செய்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா...

published 2 weeks ago

கோவையில் அமைய உள்ள இராணுவ தளவாட தயாரிப்புகள்- ஆய்வு செய்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா...

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்க உள்ள தொழில் பூங்காவை அமைச்சர் டி ஆர் பி ராஜா ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே வாரப்பட்டி ஊராட்சியில் 370 ஏக்கர் பரப்பில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்க கூடிய தொழிற்சாலைகள் அமைய உள்ள தொழில் பூங்கா அமைந்துள்ளது இதற்கான ஆணைகளை தமிழக முதல்வர் என்று தொழிற்சாலை அமைக்கும் உரிமையாளர்களிடம் வழங்க உள்ள நிலைகள் ராணுவ தொழிற் பூங்கா இடத்தை தமிழக தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பார்வையிட்டார் அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்;-

ஒட்டுமொத்த தமிழகத்தின் பரவலான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார் தமிழகம் முழுமைக்கும் தொழிற்கூடங்கள் வேலை வாய்ப்புகள் ஆகியவை அமையும் வகையில் திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது எனவும் கோவையை பொறுத்தவரை இந்த தொழில் பூங்கா மிகப் பெரிய வளர்ச்சியை உருவாக்கும் என தெரிவித்த அவர் விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழக அரசின் நிதியிலிருந்து 2000 கோடி நில உரிமையாளர்களிடம் நிலங்களை மீட்டு மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளோம் இருந்தும் இதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் மத்திய அரசு கிடப்பில் போடப்பட்டுள்ளது என கூறிய அவர் தொழில் பூங்காவிற்கான நீர் ஆதாரங்களை திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அதிகரிக்கப்பட்ட தண்ணீரை பெற உள்ளதாகவும் இந்த தொழில் கூடத்தில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வெளியேறாமல் மறு சுழற்சி செய்து பயன்படுத்தப்படும் என தெரிவித்தார். மேலும் தொழிற்சாலைகள் அமைக்க இங்குள்ள நில உரிமையாளர்கள் நிலத்தை வழங்கினால் அரசு மதிப்பீட்டின்படி அதிகபட்ச விலை வழங்கப்படும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe