கோவையில் விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்...

published 2 weeks ago

கோவையில் விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்...

கோவை: கோவை புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகன் கவுதம்(13). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். 

நேற்று முன்தினம் வடிவேலு, அவரது மனைவி இருவரும் வீட்டு முன்பு தனது உறவினர்களுடன் பேசி கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் டிவி பார்க்க செல்வதாக கவுதம் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அவரது தாய் உள்ளே சென்றபோது, கவுதமின் கழுத்தில் சுடிதார் பேண்ட் இறுக்கி சுயநினைவை இழந்து கிடந்தார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் கவுதம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் சிறுவன் விளையாடியபோது துணி கழுத்தில் இறுக்கியதில் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe