கோவை அரசு மருத்துவமனையில் நாளை போராட்டம்- அரசு மருத்துவர் சங்கம் அறிவிப்பு...

published 22 hours ago

கோவை அரசு மருத்துவமனையில் நாளை போராட்டம்- அரசு மருத்துவர் சங்கம் அறிவிப்பு...

கோவை: சென்னை கிண்டி பகுதியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயாருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி அவரது மகன் விக்னேஷ் என்பவர் மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் இன்று மதியம் முதல் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகளை புறக்கணிக்க உள்ளதாக மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

மாநில அளவிலான சங்க ஆலோசனையின் படி நாளைய தினம் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ள மருத்துவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் செயல்படும் என தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe