உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்- மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த கோவை ஊராட்சி மன்ற தலைவர்...

published 6 days ago

உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்- மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த கோவை ஊராட்சி மன்ற தலைவர்...

கோவை: கோவை மாவட்டம் வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இது குறித்து அபர் கூறியதாவது, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தான் வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் ஆகிறது. ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே துணைத்தலைவர் ராஜன், தன்னை மக்கள் பணியாற்ற விடாமல் பிரச்சனைகள் அளித்து வந்தார்.

ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே துணை தலைவர் தான் தலைவரைப் போன்று செயல்பட்டு வந்தார், தன்னை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கவில்லை என கூறினார்.

மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் வெள்ளானைப்பட்டி ஊராட்சியை சிறந்த ஊராட்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற ஆசையிலும் தான் பதவியேற்றேன், ஆனால் தனது ஆசைக்கு எதிர்மாறாகவே அனைத்தும் நடந்தது.

வார்டு உறுப்பினர் பெரும்பான்மை இல்லாததால் தனது காசோலை எழுதும் அதிகாரம் பறிக்கப்பட்டது, தான் ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தன்னால் வார்டு உறுப்பினர் பெரும்பான்மையை கொண்டுவர முடியவில்லை என்று கூறினார். 

தனது பதவி பறிக்கப்பட்டது, இருப்பினும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வந்ததாகவும் துணைத் தலைவர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததாகவும் கூறிய கவிதா, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடுத்ததாக கூறினார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் இளந்திரையன் தற்போது தனக்கு காசோலை எழுதும் அதிகாரத்தை மீண்டும் அளித்துள்ளதாக கூறி அவருக்கு தனது நன்றியை தெரிவித்தார். மேலும், தற்போது தனது பதவிக்காலம் முடிய ஒன்றரை மாதம் இருக்கிறது என்றும் தொடர்ந்த தைரியத்துடன் மக்கள் பணியாற்றுவேன் என்றும் கூறினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனையில் தலையிட்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe