கொங்கு மண்டலத்தில் நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை - கட்சியில் இருந்து விலகுவதாக கோவை மாவட்ட நிர்வாகி தெரிவிப்பு...

published 19 hours ago

கொங்கு மண்டலத்தில் நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை - கட்சியில் இருந்து விலகுவதாக கோவை மாவட்ட நிர்வாகி தெரிவிப்பு...

கோவை: கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன்,வடக்கு தொகுதி தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை பாபு, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அபிராமி,  வணிக பாசறை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய அவர்கள்,

ஒட்டு மொத்தமாக சீமான் மீது அதிருப்தியாக  இருக்கிறோம்.20 பொறுப்பாளர்கள் ஒட்டு மொத்தமாக வெளியேறிகிறோம்.மக்கள் அண்ணியமாக பார்க்கிறார்கள்.சீமான னின் பேச்சு முன்னுக்கு பின்னாக இருக்கின்றது.

இனிஎந்த கடையில் இணைய போகின்றோம் என இன்னும் முடிவு செய்யவில்லை.கட்சியை விட்டு வெளியேறுவது சீமானுக்கு தெரியாது.அவரிடம் தெரிவிக்கவில்லை.சீமான் அவர்களை நாங்கள் தவறாக ஏதும் சொல்லவில்லை.கட்சியை கடந்து நண்பர்களாக பயணிக்க ஆசை படுகிறோம்.

கொங்கு மண்டலத்தில் நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம் இல்லை.நாம் தமிழர் இரண்டாவது கட்சியாக  பிரிய வாய்ப்பு இல்லை.திமுக வலிமையான கட்டமைப்பு இருக்கிறார்கள், அதிமுக , திமுக கட்சி கட்டமைப்பு நன்றாக உள்ளது..

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் அதிருப்தியில் தான் உள்ளார்கள்.கொள்கைக்கு நடைமுறைக்கு வித்தியாசம் உள்ளது.அதில் உடன்பாடு இல்லை.அடுத்தகட்ட தலைவர்கள் யாரும் இல்லை. எதையும் செய்ய முடியவில்லை.சீமான் ஹிட்லர் போன்று செயல்படவில்லை.திமுகவில் இணைய இன்னும் முடிவு ஏற்கவில்லை.

சமூகங்களை பேசுவதில் உடன்பாடு இல்லை.அதில் சங்கடம் ஏற்பட்டுள்ளது.வெற்றியை நோக்கிய பயணம் இல்லை. சீமான் உடைய பெரிய ஆளுமை விஜய் கிடையாது.தவெக கட்சியில் நாங்கள் இணைய வாய்ப்பு இல்லை.சீமான் எடுக்கும் முடிவில் உடன்பாடு இல்லை தங்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்தனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe