வேட்டை தடுப்பு காவலர் பணி தனியார் வசம் ஒப்படைப்பு?- மாவட்ட வனபாதுகாப்பு அலுவலரிடம் முறையிட்ட வேட்டை தடுப்பு காவலர்கள்- உடன் இணைந்த சிபிஐ...

published 20 hours ago

வேட்டை தடுப்பு காவலர் பணி தனியார் வசம் ஒப்படைப்பு?- மாவட்ட வனபாதுகாப்பு அலுவலரிடம் முறையிட்ட வேட்டை தடுப்பு காவலர்கள்- உடன் இணைந்த சிபிஐ...

கோவை: தமிழ்நாடு வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியை தனியார் வசம் ஒப்படைப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதனை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் முறையிட்டு வருகின்றனர்.

 

அதன்படி முதுமலை, மேகலை, களக்காடு, தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் கோவை மாவட்ட வன அலுவலகத்தில் மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் ராமசுப்பிரமணியத்திடம் வேட்டை தடுப்பு காவலர் பண்டிகை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என  கோரிக்கை விடுத்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டு வந்தனர். அவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இணைந்து மாவட்ட வன பாதுகாப்பு அலுவலரை சந்தித்து வேட்டை தடுப்பு காவலர்களின் கோரிக்கைகள் அவர்கள் காடுகளில் சமாளிக்கும் சவால்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் தனியார் வசம் ஒப்படைத்தால் இவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன், வனத்துறையில் பணியாற்றக் கூடிய வேட்டை தடுப்பு காவலர்கள்  பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்கள் என்றும், சட்டவிரோத வனவிலங்கு வேட்டையை தடுப்பது,  வனப்பகுதிக்குள் வனவிலங்குகளை திருப்பி அனுப்புவது,  வனவிலங்குகளை பாதுகாப்பது, காடுகளில் கண்காணிப்பு கேமராக்ளை பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர்கள் தான் மேற்கொண்டு வருகிறார்கள் என தெரிவித்தார்.

வேட்டை தடுப்பு காவலர்கள் பலரும் பட்டதாரிகள் எனவும் குறிப்பாக பழங்குடியின மலைவாழ் பகுதியை சார்ந்தவர்கள் தான் வேட்டை தடுப்பு காவலர்களாக இருப்பதாக கூறினார் . இந்நிலையில் தமிழக அரசு இந்த பணியை தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்க திட்டமிட்டு வருவதாக தெரிவதாகவும் அவ்வாறு செய்யும் பட்சத்தில் இவர்களுக்கும் வனத்துறைக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படும் என தெரிவித்தார். எனவே உடனடியாக தமிழக அரசு இந்த போக்கை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். தனியார் இடத்தில் இந்த பணியை விடுவது ஏற்புடையது அல்ல எனவும் இதில் அதிகாரிகள் தெளிவாக உள்ளார்கள் ஆனால் மேலிட முடிவு என்று அதிகாரிகள் கூறிவதால் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு அனுப்புகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாக கூறினார். இதுகுறித்து உயர் அதிகாரிகளை வருகின்ற 27, 28ஆம் தேதிகளில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வேட்டை கடுப்பு காவலர்கள் 10 ஆண்டுகள் கழித்து நிரந்தர பணி ஆகும் என்ற நம்பிக்கையில் உள்ள நிலையில் அவர்களின் நம்பிக்கைக்கு மாறாக அரசு முடிவு எடுத்திருப்பதாக இதிலிருந்து தெரிவதாகவும் இதனால் தூய்மை பணியாளர்களின் பணி ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்வது போன்ற அபாயம் இவர்களுக்கு ஏற்படும் என தெரிவித்தார்.  அரசு கருணையுடன் இவர்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் இது சம்பந்தமாக அரசு நடவடிக்கை எடுப்பதை பொருத்தே அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe