கோவையில் 510 போதை மாத்திரைகள், கஞ்சா, பறிமுதல்- 10 பேர் கைது...

published 1 day ago

கோவையில் 510 போதை மாத்திரைகள், கஞ்சா, பறிமுதல்- 10 பேர் கைது...

கோவை: கோவை மாநகரப் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை, போதை ஊசி ஆகியவற்றுக்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அடிமை ஆவதை தடுக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு படை போலீஸ் அமைத்து உத்தரவிட்டுள்ளார். 

இந்த சிறப்புப்படை போலீசார் கோவை மாநகர துணை போலீஸ் கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி ரோந்து சென்று கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்கும் கும்பலை பிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை கரும்பு கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது கரும்பு கடை பகுதியைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்பவர் போதை மாத்திரை வைத்திருந்த போது பிடிபட்டார். 

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தனுஷ், நவ் பெல், முஜி, சேலம் பிரவீன் மற்றும் கோவை, சேலம், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த 10 பேர் போதை மாத்திரை மற்றும் கஞ்சா ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டனர். 
இவர்களிடமிருந்து 2 லட்சம் மதிப்புள்ள 510 போதை மாத்திரைகள், கஞ்சா, செல்போன்கள், பைக்குகள்  ஆகியவற்றை போலீசார் பறிமுதல செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe