கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்...

published 1 day ago

கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்...

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார். ஆய்வின் போது அங்குள்ள வசதிகள் குறித்தும் தேவைப்படும் வசதிகளை குறித்தும் கேட்டறிந்தார். பதிவேடுகள், சிசிடிவி கேமரா அறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தேவைப்படும் வசதிகள் குறித்து காவல் நிலைய ஆய்வாளரிடம் கேட்டறிந்தார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர், மாதம் ஒரு தாலுகாவில் முழு ஆய்வு மேற்கொள்வதாகவும் அதன்படி இந்த மாதம் தெற்கு தாலுகாவை தேர்ந்தெடுத்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மக்களுடன் முதல்வர் திட்டம், மக்களுடன் மாநகராட்சி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து மனுக்களை பெறுவதாகவும் தெரிவித்தார்.

மாநகராட்சி பகுதிகளாக இருந்தாலும் பல்வேறு துறைகளை சார்ந்த கோரிக்கைகள் இருப்பதாகவும் அதன்படி மக்கள் பிரதிநிதிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நீண்ட கால பிரச்சனைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என கூறியிருப்பதாக  தெரிவித்தார்.

அங்கன்வாடி, காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேரில் பார்வை இடுவதாகவும்  அதன்படி இந்த காவல் நிலையத்தில் பார்வையிட்டதாக தெரிவித்தார். இந்த காவல் நிலையத்தில் என்னென்ன வசதிகள் உள்ளது கூடுதலாக வசதிகள் ஏதேனும் தேவைப்படுகிறதா ஏதாவது பிரச்சனைகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்துள்ளதாக தெரிவித்தார்.

காலை ராமநாதபுரம் பகுதியில் நடந்த விபத்து குறித்தான கேள்விக்கு அந்த சம்பவம் வேதனை அளிப்பதாகவும், அது சம்பந்தமாக நேரிலேயே ஆய்வு செய்ததாகவும் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் சற்று கடினமான பணிகள் தான் என குறிப்பிட்டார். அங்கு பணிகள் நிறைவடைந்தால் உடனடியாக சாலை போடும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தற்பொழுது பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு பகுதியில் சேம்பர் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அது முடிந்த உடனேயே சாலைகள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் எந்த சாலையை எடுத்துக் கொண்டாலும் போக்குவரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த முடியாது, ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் தான் முழுமையாக பணிகள் மேற்கொள்ள முடிகிறது என கூறிய ஆட்சியர் அதனால் தான் பணிகளை முடிப்பதற்கான காலம் அதிகரிப்பதாக தெரிவித்தார். மேலும் பணிகள் முடிக்கப்பட்டால் உடனடியாக சாலையை போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe