திராவிட மாடல் ஃபார்முலா- கோவையில் உதயநிதி ஸ்டாலின் கூறிய விளக்கம்...

published 1 day ago

திராவிட மாடல் ஃபார்முலா- கோவையில் உதயநிதி ஸ்டாலின் கூறிய விளக்கம்...

கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வேர்க்கல்வித்துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தில் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி 31 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் 29 மையம் துவக்கி உள்ளோம்.இன்று 30 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளோம்.கோவை மாணவர்களை சந்திக்கும் போது மனதுக்கு இனிமையாக இருக்கும்.நான்கு பேருக்கு வேலை கொடுக்கும் உறுதியோடு படிக்கும் மாணவர்கள் கோவை மாணவர்கள்.

தமிழ்நாடு ஒட்டுமொத்த பிரச்சனையை தீர்க்கும் மாடல்,திராவிட மாடல் ஃபார்முலா.நான் முதல்வன் திட்டத்தை உலகமே புகழ்ந்து கொண்டுள்ளது.

நான் முதல்வன் திட்டம் மூலம் இதுவரை 30 லட்சம் ஒளி ஏற்றி வைத்துள்ளது.2லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.25 மாணவர்கள் லண்டன் சென்று வந்தனர். இது தான் திராவிட மாடல் வெற்றி. இதில் 15 பேர் தன்னை சந்தித்தனர்.தங்கை அமிர்தா சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது.பல நூறு அமிர்தவை உருவாக்க இந்த நான் முதல்வன் திட்டம் செயல்படுகிறது.

வேலை வாய்ப்பை உருவாக்க இந்த அரசு உறுதுணையாக இருக்கும்.தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு என்றும் திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe