பாடகி இசைவாணி மீது கோவையில் புகார்...

published 5 days ago

பாடகி இசைவாணி மீது கோவையில் புகார்...

கோவை: சர்ச்சைக்குரிய வகையில் "I am sorry ayyappa" எனும் பாடலை பாடியதாக கானா பாடகி இசைவாணி மீது அகில பாரத இந்து மகா சபா கட்சியின் மகளிர் அணியினர் காவல் ஆணையரிடம் புகார் அளிததுள்ளனர்.

சர்ச்சைக்குரிய வகையில் "I am sorry ayyappa" எனும் பாடலை பாடியதாக கானா பாடகி இசைவாணி மீது அகில பாரத இந்து மகா சபா கட்சியின் கோவை மாவட்ட மகளிர் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அகில பாரத இந்து மகா சபா கட்சி மாநில மகளீர் அணி துணைத் தலைவர் நிர்மலா தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அவர் அளித்துள்ள மனுவில், "I am sorry ayyappa” எனும் பாடலை கானா பாடகி இசைவாணி பாடியுள்ளதாகவும் இந்தப் பாடல் ஐயப்ப பக்தர்களின் மத சிந்தனையையும் வழிபாடு மற்றும் விரத கட்டுப்பாடுகளையும் கொச்சைப்படுத்தும் விதத்திலும் அவமதிக்கும் விதத்திலும் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த பாடல் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் இணையதளத்திலும் பரவுவதால் சமூக ஒற்றுமையும் நல்லிணக்கமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் ஐயப்ப பக்தர்களின் கடவுள் நம்பிக்கையை அவதூறு செய்யும் விதத்தில் பாடல் வெளியிட்ட இசைவாணி உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தப் பாடல் மேற்கொண்டு சமூக வலைதளங்களில் பரவாமல் தடுக்குமாறும் சமூக வலைதளங்களில் இருந்து இந்தப் பாடலை நீக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்கொண்டு இது மாதிரியான இந்துகளை இழிவுபடுத்தும் பாடல்களை யாரும் பாடாதவாரு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe