கோவையில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட இடத்தை வருவாய்த்துறை பதிவு செய்யவில்லை- விவசாயிகள் புகார்….

published 4 hours ago

கோவையில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட இடத்தை வருவாய்த்துறை பதிவு செய்யவில்லை- விவசாயிகள் புகார்….

கோவை:  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைவர் பழனிச்சாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை மாவட்டம் பேரூர்,வேடப்பட்டி கிராம நத்தத்தில் கொடுக்கப்பட்ட பட்டாக்களை வருவாய் ஆவணங்களில் நடைமுறை ப்படுத்த வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை பேசிய தலைவர் பழனிச்சாமி,

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் வேடப்பட்டி கிராமம் காசா எண் நத்தத்தில் 25 மேற்பட்டோருக்கு கொடுக்கப்பட்ட பட்டாக்கள் இதுவரை வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதனால் தொண்டாமுத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் எந்த விதமான பத்திரப்பதிவு பொதுமக்கள் மேற்கொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாக கூறினார்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் தற்போது வரை எந்த மரம் நடவடிக்கையும் எடுக்கவில்லை  என்றும் வருவாய் ஆவணங்களில் வழங்கப்பட்ட பட்டாவின் அடிப்படையில் உரிய மாறுதல்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe