கோவையில் செய்தியாளர்களின் கேள்விக்கு கமலஹாசன் பாணியில் பதிலளித்த ஈஸ்வரன்...

published 2 days ago

கோவையில் செய்தியாளர்களின் கேள்விக்கு கமலஹாசன் பாணியில் பதிலளித்த ஈஸ்வரன்...

கோவை: திமுக கூட்டணியிலிருந்து விலக வேண்டிய சூழல் இல்லை குறிப்பாக நெஞ்சை பிளந்து காமிக்க வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன் தமிழகத்தில் நிலைபெறும் சட்டம் ஒழுங்கு தொடர்பான எதிர்க்கட்சியனரின் விமர்சனங்களுக்கு நடிகர் கமலஹாசனின் பாணியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் பதில் அளித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன்,
2008 ஆம் ஆண்டு இருந்த அரசியல் வேறு இப்போது இருக்கின்ற அரசியல் வேறு என்றும் இன்று திராவிட அரசியல் தமிழ் தேசிய அரசியல், ஆன்மீக அரசியல் இப்படி அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர் என்றும் ஆனால் நாம் எடுப்பது  ஆக்கப்பூர்வமான அரசியல் என்றும் தெரிவித்தார்.மேலும் எல்லாத்திட்டங்களுக்கு மக்களுக்கு சென்று சேர வைப்பது தான்  ஆக்கப்பூர்வமான அரசியல் என்றும்,மக்களிடம் சேவை செய்கின்ற நேர்மையான அரசியல் எங்களிடம் தான் இருக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார். 

தமிழக அரசு, பொள்ளாச்சியை தனி  மாவட்டமாக அறிவிக்க தயங்க கூடாது.என்றும்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அவர்கள் கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும் அதேபோல் சொத்தவரியால் பொதுமக்கள் பெரிதளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் அதை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர்,
கோவை மாநகராட்சி மிகப்பெரிதாக விரிவடைந்து கொண்டிருப்பதால் அதை இரண்டாக பிரிக்க வேண்டும். எனவும் ஆனைமலை - நல்லாறு திட்டத்தை கேரள அரசுடன் பேசி,விரைந்து அமல்படுத்த வேண்டும். எனவும்  கேட்டுக்கொண்டார்.

இன்று நயன்தாராவுக்கும் - தனுசுக்கும்  அல்லது ஏ.ஆர்.ரகுமானுக்கும் அவரது மனைவிக்கும் நடக்கும் சண்டை தான் பெரிய பிரச்சனையா எனவும்
ஒரு பிஸ்னஸ் நடக்க வேண்டும் என்பதற்காக நயன் தாராவும் - தனுசும் சண்டை போட்டுக்கொள்கிறார்.ஆனால் நாம் அதை தேவையில்லாமல் விவாதித்து கொண்டு இருக்கிறோம்.
ஒரு தூய்மையான அரசியல் எங்களிடம் உள்ளது எங்களிடம் வாருங்கள் எனவும் அவர் சுட்டிகாட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கோவை மாவட்டத்திற்க்கு கொண்டு வந்துள்ள திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்  எனவும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து கொண்டு வர வேண்டும், நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக
தேங்காய் எண்ணெய்யை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஆட்சியிலும்  அதிகாரத்திலும் பங்கு என்பது தேர்தலுக்கு பின் நடக்கும் சூழலைக் பொறுத்து தான் பேச வேண்டும் எனவும் சில கட்சிகள் நாம் தலைப்பு செய்திகளில் இடம்பெற வேண்டும் என்பதற்காக இது போன்ற கருத்துகளை சொல்லி வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டதுடன் 
ஆக்கப்பூர்வமான மக்களுக்கான பிரச்சனைகளை முன்னெடுத்து பேச வேண்டும் எனவும் விஜய் கட்சி ஆரம்பித்ததிற்க்கு பிறகு நாம் தமிழர் கட்சியில் சில மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் தான் ரஜினி - சீமானின் சந்திப்பை பார்க்கிறேன்* எனவும் தெரிவித்தார்.

திமுக கூட்டணியிலிருந்து விலக வேண்டிய சூழல் தங்களுக்கு இல்லை நெஞ்சை பிழந்து காமிக்க வேண்டிய அவசியமில்லையுமுமில்லை என கூறிய ஈஸ்வரனிடம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் நன்றாக இருக்கும் என நடிகர் கமலஹாசன் பானியில் பதில் அளித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe