விமர்சிப்பது கருத்துச் சுதந்திரம்... திரைப்பட சங்கத்திற்கு ஐகோர்ட் கொடுத்தது குட்டு...!

published 17 hours ago

விமர்சிப்பது கருத்துச் சுதந்திரம்... திரைப்பட சங்கத்திற்கு ஐகோர்ட் கொடுத்தது குட்டு...!

சென்னை: விமர்சனம் என்பது கருத்துச் சுதந்திரம் என்று சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

திரைப்படங்களை விமர்சிக்கும் ரசிகர்களின் கருத்துகளை ஊடகங்களில் வெளியிடுவதைத் தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருந்தார். 

இதற்குத் திரைப்பட தயாரிப்பாளர்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். இதனிடையே, திரைப்படங்களை 3 நாட்களுக்குள்ளாகவே ஊடகங்களில் விமர்சிப்பதால், வசூலில் பிரச்சனை எழுவதாகக் கூறி, விமர்சனம் செய்யத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சவுந்தர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விமர்சனம் என்பது கருத்துச் சுதந்திரம். எனவே இந்த வழக்கில் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. திரைப்படங்கள் வெளியான, 3 நாட்களுக்குள் விமர்சனங்களை வெளியிடத் தடை விதிக்க முடியாது.

இதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe