ரூபாய் நோட்டுக்கு பதிலாக கட்டுக்கட்டாக காகித நோட்டு... கோவையில் பெண்களிடம் மோசடி!

published 1 week ago

ரூபாய் நோட்டுக்கு பதிலாக கட்டுக்கட்டாக காகித நோட்டு... கோவையில் பெண்களிடம் மோசடி!

கோவை: வட்டி இல்லாமல் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 10 லட்சம் வாங்கி விட்டு கட்டுக்கட்டாக காகித நோட்டுகள் கொடுத்து மோசடி செய்தவர் கோவையில் கைது.

சின்னியம்பாளையத்தில் மகளிர் சுய உதவிக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவினருக்கு சூலூரை அடுத்த செலக்கரிச்சல் பகுதியைச் சேர்ந்த விஜயா மற்றும் அன்பழகன் (50)ஆகியோர் அறிமுகமானார்கள்.

அவர்களிடம் அன்பழகன், தான் அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், ஊனமுற்றோர் பெயரில் அறக்கட்டளை தொடங்கினால் வெளிநாட்டிலிருந்து வட்டி இல்லாமல் கடன் கிடைக்கும் என்று கூறி உள்ளனர்.

தொடர்ந்து, விஜயா மற்றும் அன்பழகன் ஆகியோர் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த 28 பெண்களை சந்தித்து, வட்டி இல்லாமல் ரூ.6.75 கோடி கிடைக்கும், என்றும் அதற்கு முன்பணம் கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதனை நம்பிய பெண்கள், 28 பேரும் தலா ரூ.5 லட்சம் கொடுக்க முடிவு செய்து, முதற்கட்டமாக இருவர் மட்டும் ரூ.5 லட்சம் கொடுத்தனர். இதனிடையே நேற்று அன்பழகன், விஜயா ஆகியோர் பணப் பெட்டி ஒன்றைக் கொடுத்து, அதில், ரூ.6.75 கோடி இருப்பதாகவும், பிரித்து எடுத்துக் கொள்ளாம் என்றும் கூறிவிட்டுச் சென்றனர்.

தொடர்ந்து, குழு உறுப்பினர்கள் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டது. அப்போது அதில் கட்டுக்கட்டாக பேப்பர் கட்டுகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அப்போது தான் அன்பழகனும், விஜயாவும் தங்களை மோசடி செய்ததை  மகளிர் குழுவினர் அறிந்தனர். இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அன்பழகனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஜயாவை தேடி வருகின்றனர்.

வட்டியில்லா பணம் கொடுப்பதாகக் கூறி மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்து, பணத்திற்கு பதிலாக, காகிதத்தைக் கொடுத்த சம்பவம் மகளிர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe