தடாகம் அருகே ரேசன் கடையை சூறையாடிய காட்டுயானைகள்- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 9 hours ago

தடாகம் அருகே ரேசன் கடையை சூறையாடிய காட்டுயானைகள்- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, மருதமலை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில்  இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் உலா வருகின்றன.  அவ்வாறு 
வரும் காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தி சொல்வதும், கடைகளை சேதப்படுத்தி செல்வதும் தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் நள்ளிரவு தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறிய  காட்டு யானைகள் ரேஷன் கடையை சேதப்படுத்தி உள்ளே இருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களை தின்று சென்றுள்ளது. சத்தம் கேட்டு வந்த ஊர்மக்கள் யானையை விரட்டினர்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பும் இதே கடையை சேதப்படுத்தி சென்ற காட்டு யானைகள் தற்போதும் வந்து சேதப்படுத்தி ரேஷன் பொருட்களை தின்று சென்றுள்ளது.

அடிக்கடி இப்பகுதிக்கு வரும் காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவதாகவும், ரேசன் கடை, மளிகை கடைகளை சேதப்படுத்துவதாகவும்  பொதுமக்கள் கூறுகின்றனர்.  எனவே வனத்துறையினர் யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வராமல் இருக்கும் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtube.com/shorts/F68YKVWHmYc?feature=share

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe