உக்கடம் பாலத்தில் காத்தாடி பறக்கவிட்ட மூவர் மீது வழக்கு- முழு விவரங்கள் இதோ...

published 1 week ago

உக்கடம் பாலத்தில் காத்தாடி பறக்கவிட்ட மூவர் மீது வழக்கு- முழு விவரங்கள் இதோ...

கோவை: கோவை ஆத்துப்பால மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில்  சென்று கொண்டிருந்த இளைஞரின் கழுத்தில் பட்ட நூல் அறுத்த விவகாரத்தில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்த கார்த்திக் கடந்த  7 ஆம் தேதி உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாலத்தில் பறந்து வந்த பட்டத்தின் நூல் கார்த்திக்கின் கழுத்தில் சுற்றிக்கொண்டது. நிலை தடுமாறிய அவர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி பட்ட நூலை எடுக்க முற்பட்டபோது கைகள் மற்றும் கழுத்தில் ரத்த காயத்திற்கு உள்ளானார். 

சிகிச்சை பெற்றுக் கொண்ட கார்த்திக் கடந்த திங்கள்கிழமை மாநகர காவல் ஆணையரிடம் இது தொடர்பாக புகார் அளித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருந்தார்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கருப்புக்கடை பகுதியை 3 பேரை கைது செய்தனர்.

அவர்கள் மீது தெரிந்தே மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் கரும்பு கடை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

கடுமையான எச்சரிக்கைக்கு பிறகு கைது செய்யப்பட்ட மூவரும் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe