கோவையில் சுற்றுச்சூழல் சம்பந்தமான மூன்று நாள் பயிற்சி துவங்கியது...

published 1 day ago

கோவையில் சுற்றுச்சூழல் சம்பந்தமான மூன்று நாள் பயிற்சி துவங்கியது...

கோவை: மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சார்பில் கோவையில் உள்ள மாநில வனப் பணிகளுக்கான மத்திய வன உயர் பயிற்சியகத்தில் ஊடகவியலாளர்களுக்கான "சுற்றுச் சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் (Promotion of LiFE Activities)" மூன்று நாள் பயிற்சி இன்று துவங்கியுள்ளது.

இந்த பயிற்சியில் சுற்று சூழலுக்கு உகந்த வாழ்வு முறையை எவ்வாறு கடை பிடித்து, மாற்று எரிசக்தி பயன்பாட்டினை ஊக்குவிப்பது மற்றும் இவற்றை பொது மக்களிடையே ஊடகதின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து துறை வல்லுனர்கள் எடுத்துரைக்கின்றனர்.

இதன் துவக்க நிகழ்வில், மத்திய வன உயர் பயிற்சியகத்தின் முதல்வர் திருநாவுக்கரசு சிறப்புரை ஆற்றுகையில், சுற்றுச் சூழல் பாதுகாப்பில் தனி மனிதர்களின் பங்கு, மாற்று எரி சக்தி பயன்பாட்டினை ஊக்குவித்தல், கால நிலை மாற்றத்தின் பாதிப்புகள் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.

இப்பயிற்சியை, வன பாதுகாவலர் மற்றும் பயிற்சியாளர் வித்யாசாகர் ஒருங்கிணைக்கிறார்.

துவக்க நிகழ்வில் வன பயிற்சியகத்தின் அதிகாரிகள் செந்தில்குமார், அனிஷா கல்கோர், அருள்ஞான மதுரம், விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe