என்னுடைய குடும்பமும் விஜய் ரசிகர்கள் தான்- கோவையில் அண்ணாமலை அளித்த பேட்டி...

published 1 day ago

என்னுடைய குடும்பமும் விஜய் ரசிகர்கள் தான்- கோவையில் அண்ணாமலை அளித்த பேட்டி...

கோவை: கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் மூன்று மாதம் கழித்து அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். பாஜகவில் அமைப்பு தேர்தல் நடந்து வருவதாகவும் நேற்றைக்கு வர வேண்டி இருந்த நிலையில் விமான தாமதம் சென்னை விமான நிலையம் மூடியது உள்ளிட்ட காரணங்களால் இன்று வந்தடைந்தேன் என தெரிவித்தார். புதுச்சேரியில் 20 ஆண்டுகாலம் இல்லாத மழை தற்பொழுது பெய்துள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் உயர்மட்ட அமைச்சர் வந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார் அப்பொழுது முதலமைச்சரிடம் மேற்கொள்ளப்பட்ட விஷயங்கள் குறித்து கேட்டறிவார் என கூறினார்.

இந்த மூன்று மாத காலத்தில் பாஜக வலு பெற்றுள்ளதாகவும் தமிழக அரசியலும் மாறி இருப்பதாகவும் தெரிவித்த அவர் இந்த மூன்று மாத காலத்திற்குள் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்று இருப்பதையும் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதையும் சுட்டி காட்டினார். 2026 ஆம் ஆண்டு தேர்தல் வித்தியாசமான தேர்தலாக இருக்கும் எனவும் கூறினார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொழுது பல்வேறு மனிதர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறிய அவர் அங்கு இருக்கும் பொழுது அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் பாஜகவில் தற்பொழுது அமைப்பு தேர்தல் நடந்து வருவதாக தெரிவித்த அவர் பாஜகவினர் வெளிவேலைகளை குறைத்துக் கொண்டு கட்சிக்குள் அமைப்பு வேலைகளை செய்து வருவதாகவும் கூறினார். திராவிட கட்சியின் ஆதிக்கம் குறைந்துள்ளது எனவும் விஜய் பேசியதிலும் பெரும்பாலானவை திராவிட சித்தாந்தம் தான் என தெரிவித்தார். விஜயின் வருகை புதிது அல்ல ஆனால் விஜய்யின் சித்தாந்தம் புதிது எனவும் கூறிய அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க வேண்டும் அப்பொழுதுதான் அவரது நிலை தெரியவரும் விஜயின் கொள்கைகள் வெளியில் வரவேண்டும் என கூறினார். திமுக அரசு குடும்ப அரசு என்பது ஒப்புக்கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார். ரஜினி வலதுசாரி ஆதரவாளரோ பாஜக ஆதரவாளரோ இல்லை எனவும் ரஜினி மோடியின் மீது மரியாதை வைத்துள்ள ஒருவர் எனவும் ரஜினியை சிறிய வட்டத்திற்குள் ஆதரவாளர் என்று கூறுவது சரியல்ல என தெரிவித்தார்.

சீமானை அரசியல்வாதியாக மதிக்கிறேன் ஆனால் அவரது பாதை வேறு எங்களுடைய பாதை வேறு இருவரும் ஒன்றாக பயணிக்க ஒரு கோடு கூட இல்லை என கூறினார். விஜய் பெரும் நடிகராக வலம் வருகிறார் என்னுடைய குடும்பத்திலும் விஜய் ரசிகர்கள் தான் என தெரிவித்த அவர் ஆனால் ஓட்டு போடுவார்கள் என்பதை வேறு என கூறினார்.

பாஜக புதிய கூட்டணியை அமைத்துள்ளோம் எனவும் அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளார்கள் அவர்களும் 2026 இல் வெல்வதற்கு கடுமையாக உழைக்கிறார்கள் நாங்களும் உழைக்கிறோம் என தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாகவும் தமிழக காவல்துறை ஆளுமை உள்ள காவல்துறை. ஸ்காட்லாந்துக்கு இணையான தமிழக காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சூலூரில் பெட்ரோல் பைப்லைன் விவகாரத்தில் விவசாயிகள் கூறுவது நியாயமான ஒன்றுதான் எனவும் இது சம்பந்தமாக வருகின்ற 10ஆம் தேதி பாஜக விவசாய அணி சார்பில் டெல்லிக்குச் சென்று அமைச்சரை ஒரு குழு சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகம் ஆடுவதாகவும் மத்திய அரசுக்கு நோட்டு போட்டு கொடுத்தது மாநில அரசுதான் எனவும் கூறினார். மேலும் மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு வேண்டும் என்று எதிர்க்கிறது எனவும் தெரிவித்தார். வயநாடு தேர்தல் முடிவுகள் குறித்தான கேள்விக்கு பிரியங்கா காந்தி எதற்கு வந்துள்ளார்கள் என்றால் ராகுல் காந்தியால் காங்கிரஸ் எழுச்சி பெறாது என்பதால் தான் என்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 எம்பிக்கள் இருப்பது இதுவே முதல் முறை என்றும் வயநாடு தேர்தல் வெற்றி என்பது காங்கிரஸ் கூட்டணி உடைவதற்கு முதல் படி எனவும் விமர்சித்தார். மேலும் ஜார்க்கண்ட் தேர்தலில் அடுத்த முறை போராடுவோம் எனவும் கூறினார்.

அதானி குறித்து இரண்டு நாட்களில் தரவுகளோடு பேசுகிறேன் எனவும் தெரிவித்தார். விஸ்வகர்மா விவகாரத்தில் தமிழக அரசு வேண்டும் என்று திட்டத்தை வேண்டாம் என கூறுகிறார்கள் எனவும் தமிழக அரசு தடுக்கும்போது மத்திய அரசு சில திட்டங்களை செயல்படுத்த முடியாது எனவும் கூறினார். ஆளுநரை பொருத்தவரை தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை அளிக்கிறார் என்றும் தமிழக அரசும் தமிழ்த்தாய் வாழ்த்து தேசிய கீதம் இரண்டும் முக்கியம் என்ற நிலைப்பாட்டிற்கு வரவேண்டும் என கூறினார். மேலும் தமிழக அரசியலில் சூப்பர் ஸ்டார் வாக்காளர்கள் தான் எனவும் சீமான் முக்கியமான ஒரு தலைவர் தான் 2025 தீர்மானிக்கும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe