கோவையில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.7.65 லட்சம் மோசடி...

published 5 days ago

கோவையில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.7.65 லட்சம் மோசடி...

கோவை: கோவை காமராஜர் ரோடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேஷ் சுந்தர் சிங் (34). இவர் மார்க்கெட்டிங் தொடர்பான வேலையை ஆன்லைனில் தேடினார். 

அப்போது முகநூலில் வந்த விளம்பரத்தில், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்து அவர் வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்தார். பின்னர் தனது முகவரி, ஆதார், வங்கி கணக்கு விவரங்களை அதில் பதிவு செய்தார். 

பின்னர் செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்யுமாறு ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய சுரேஷ் சுந்தர் சிங் பல கட்டங்களாக ரூ.7,65,980 அனுப்பினார். ஆனால், அவர் சொன்னபடி எந்த விதமான லாப தொகையும் கிடைக்கவில்லை. 

முதலீடு செய்த தொகையையும் தனது கணக்கில் வரவு வைக்க முடியவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த சுரேஷ் சுந்தர் சிங் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe