பாஷாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சீமான் கூறியது என்ன?

published 2 days ago

பாஷாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சீமான் கூறியது என்ன?

கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த பாஷா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். உக்கடம் ரோஸ் அவென்யூ பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறுகையில்:-

கோவை சிறையில் இருந்த போது பாஷாவுடன் மனம் விட்டு பேசி இருக்கிறேன். இது மிகப்பெரிய துயரம். அவரை இழந்து வாடும் இஸ்லாமிய சொந்தங்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக மீதம் உள்ள சிறைவாசிகளை வெளியே கொண்டு வர போராடுவோம். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் தொடர் போராட்டங்களால் தான் விடுதலையானார்கள். இப்பிரச்சனையை சட்டத்தின்படி அணுகுவது சரியல்ல. மனிதநேய அடிப்படையில் அணுகி சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் இதற்காக ஆளுநரிடம் மனு அளிப்பது வீண் வேலை எனவும், ஆளுநருக்கும், பா.ஜ.க விற்கும் ஒரே கொள்கை நிலைப்பாடு தான், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசுவது, சிந்திப்பது தவிர அவர்களுக்கு வேறு கொள்கை இல்லை எனவும், அவர்களிடம் பாகிஸ்தான் பக்கத்து நாடு, பசுநாடு, ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் தான் இருக்கிறது, 

பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவிற்கு அந்தப் பக்கம் இருந்தால், அவர்களுக்கு அரசியல் கிடையாது எனவும், இதில் ஆளுநர் கையெழுத்திட மாட்டார், மக்களின் பிரதிநித்துவம் பெற்ற ஆட்சியதிகாரத்திற்கு இல்லாத அதிகாரம், நியமன உறுப்பினரான ஆளுநருக்கு இருக்கிறது என்றால் மக்களாட்சி எங்கே இருக்கிறது..? இது தான் ஜனநாயகமா..? மக்களின் மனநிலைக்கு ஏற்ப அரசாட்சி செய்ய வேண்டும் எனவும், ஆளுநர் நியமன உறுப்பினர் தான், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் இல்லை, அவருக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது என்றால், தேர்தல் எதற்கு..? எங்களிடம் அதிகாரம் இருந்தால், ஆளுநர் கையெழுத்தை அப்புறம் பார்க்கலாம் என சிறை கதவுகளை திறந்து விட்டு இருப்போம் எனவும் வழக்கு தானே போடுவார்கள் அதனை எதிர்கொள்வோம் அதற்கு வாய்ப்பில்லாத போது இதைப் பேசி பயனில்லை என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe