நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும்-அரசியல் ஆலோசகர் தெரிவிப்பு...

published 3 hours ago

நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும்-அரசியல் ஆலோசகர் தெரிவிப்பு...

கோவை: இளைஞர் காங்கிரஸின் சட்டமன்ற முன்னாள் தலைவரும், அரசியல் ஆலோசகருமான  பிரபு, நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம் என்றும் பிரபாகரனின் மகன் இறந்ததற்கு ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தியையும் விடமாட்டோம் என்று பேசியதாகவும், பிரபாகரனின் புகைப்படத்தை நாம் தமிழர் கட்சியின் பேனர் மற்றும் போஸ்டர் களில் உபயோகிப்பதாகவும் LTT யின் பெயர்களையும் உபயோகிப்பதாகவும் கூறிய பிரபு, இதனை எலக்சன் கமிஷன் உட்பட யாரும் கண்டு கொள்வதில்லை என தெரிவித்தார்.

LTT தடை செய்யப்பட்ட இயக்கம் என்று இருக்கும் பொழுது அதன் பெயரை அனைத்து போஸ்டர் மற்றும் பேனர்களில் சீமான் உபயோகிப்பதாகவும் இது சட்டப்படி தவறு என குறிப்பிட்டார். எனவே அவரது கட்சியை அனைத்து தேர்தல்களில் இருந்தும் தடை செய்ய வேண்டும் எனவும் சீமான் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe