மேற்கு புறவழிச் சாலை திட்டத்தில் அணுகு சாலைகள் வேண்டும்- விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை…

published 4 days ago

மேற்கு புறவழிச் சாலை திட்டத்தில் அணுகு சாலைகள் வேண்டும்-  விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை…

கோவை: கோவை குனியமுத்தூர் முதல் மாதம்பட்டி  வரை மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் சாலை அமைக்கும் போது கிராம சாலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகள் பாதிக்காத வண்ணம் சாலை அமைத்திடவும், தேவைப்படும் இடங்களில் அணுகு சாலைகள் அமைத்திடவும் கோரி மேற்குப் புறவழிச்சாலை பாதிக்கப்பட்டோர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில், கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், மேற்கு புறவழிச் சாலை மதுக்கரை மைல்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை சுமார் 32.5 கிலோ மீட்டர் தூரம் வரை செயல்படுத்த அரசு விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது என்றும் இத்திட்டத்தில் முதல்கட்டமாக 250 கோடி ரூபாய் மதிப்பில் மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கிலோ மீட்டர் தூரம் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது‌ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்கு புறவழிச் சாலையில், கிராம சாலைகள் பாதிக்கின்ற வண்ணம் சாலைகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்றும் புதிதாக அமைக்கப்படும் மேற்கு புற வழிச்சாலையின் ஓரத்தில் கிராம சாலைகள் இணைக்கும்போது சர்வீஸ் ரோடுகள் விடப்படாமல் சாலை அமைத்தால் விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரது போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்கு புறவழிச் சாலை திட்டத்திற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்தி சாலை அமைக்க திட்டமிட்ட அரசு அதிகாரிகள், நிலம் கொடுத்த விவசாயிகள் ஒரு பக்கம் இருந்து மற்றொரு பக்கம் செல்வதற்கு தகுந்தாற்போல் சாலை அமைக்க உண்டான ஏற்பாடுகளை செய்ய தவறிவிட்டதாக கருதுவதாகவும் குறிப்பிட்ட இடங்களில் மேம்பாலங்களும் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு ஏற்ப சர்வீஸ் சாலையும் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிசாமி கூறுகையில், சர்வீஸ் சாலையே இல்லாத புறவழிச்சாலை திட்டம் என்பது வினோதமாக இருக்கிறது என்றார். மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி நேரடியாக வரவேண்டும் என்றும் பார்வையிட்டு விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் அமைகிறதா என்பதை தெரிந்து கொண்டு சர்வீஸ் ரோடு அமைத்து தர வேண்டும் என்றும் கூறினார். அரசு திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை என்றும் கூறிய அவர், திட்டங்கள் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை பாதிக்காத வகையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe