3 நாட்களுக்குள் தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த காவல் ஆணையாளர் அறிவுறுத்தல்...

published 2 hours ago

3 நாட்களுக்குள் தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்த காவல் ஆணையாளர் அறிவுறுத்தல்...

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்   காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது குறித்து ஆய்வு செய்தார்.

கோவை காந்திபுரம் பகுதியில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தனியார் பேருந்துகளில்  சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்.

கோவை மாநகரில் இயங்கும் உள்ள 149  தனியார் டவுன் பேருந்துகளில் 129ல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதும் வெளியூர் செல்லும் 107 தனியார் பேருந்துகளில் 50 ல் சிசிடிவிகள் நிறுவப்பட்டுள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு பேருந்திலும் 5 முதல் ஏழு வரையிலான சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. கோவை மாநகர காவல் ஆணையர் சிசிடிவி நிறுவப்படாத அனைத்து தனியார் பேருந்துகளிலும் இன்னும் மூன்று தினங்களுக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe