கோவையில் ஒரு வருடம் கழித்து துவங்கியது ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி...

published 1 day ago

கோவையில் ஒரு வருடம் கழித்து துவங்கியது ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி...

கோவை: கோவை மாநகரில்  ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ச்சியாக நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகள், குழு நடனங்கள், உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். 

இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தொடர்ந்து ஒரு வருடம் கழித்து இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியானது மீண்டும் கோவையில் துவங்கியுள்ளது.

முதல் நாளான ஆர்.எஸ்.புரம்  டிபி சாலையில் இன்று காலை சுமார் 6:30 மணிக்கு நிகழ்ச்சியானது துவங்கியது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தனர். இதில் பல்வேறு சினிமா பாடல்கள் இசை நிகழ்ச்சிகள் குழு நடனங்கள்  என ஏராளமான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வந்து கண்டு ரசித்தனர். மேலும் பொதுமக்களும் பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.  அதே சமயம் இந்நிகழ்வில் 90's கிட்ஸ் விளையாண்ட சாக்குப் போட்டி, டயர் ஓட்டுதல், குண்டு விளையாடுதல்,  சாலையில் வளையப்பட்ட பரமபதம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன.

மேலும் நிகழ்ச்சிக்காக இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு 50க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுப்பட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe