கோவையில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி...

published 18 hours ago

கோவையில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி...

கோவை: கோவை ரத்தினபுரி  பகுதி ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி கார்த்தியாயினி.

ஐந்து வீடுகள் உள்ள லைன் வீட்டில் அவர் வசித்து வருகிறார்.   அவரது வீட்டின் பின்புறம் சுமார் 21 சென்ட் நிலம் உள்ளது. அங்கிருந்த பழைய கட்டிடத்தை இடித்து தூய்மை படுத்தும் பணியில் அதன் உரிமையாளர்களான மூன்று பேர் கடந்த ஒரு வார காலமாக ஈடுபட்டு வருகின்றன.  

இந்நிலையில் இரண்டு வீடுகளுக்கும் இடையில் உள்ள பொதுசுவரின் மறுபுறத்தில் பழைய கட்டிடத்தை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த சுவரின் பாகங்கள் பாட்டியின் இல்லம் உள்ள பகுதியில் விழுந்துள்ளது. அதேசமயம் மூதாட்டி கழிவறைக்கு சென்று  திரும்பிய போது சுவரின் சில கற்கள் மூதாட்டியின் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

இதையடுத்து தகவலறிந்து வந்த அப்பகுதி மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் ரத்தினபுரி காவல்துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேசமயம் கட்டிடத்தை இடித்து வந்த ஜேசிபி ஓட்டுநர் மற்றும் நிலத்தின் உரிமையாளர்கள்  அங்கிருந்து தப்பியோடிய நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள   ரத்தினபுரி காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe