விழுப்புரத்திற்கு கை கொடுக்கும் கோவை!

published 1 day ago

விழுப்புரத்திற்கு கை கொடுக்கும் கோவை!

கோவை: மழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்திற்கு கோவை மாநகராட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. விழுப்புரத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

அம்மாவட்டத்தில் மயிலம் பகுதியில் 51.செ.மீ., நெம்மேலியில் 46 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழக அரசு நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள சூழலில், முதலமைச்சர் ஸ்டாலின் நாளை நேரடி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

இதனிடையே கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு, கோவை மாநகராட்சி சார்பில் முதற்கட்டமாக 2500 குடிநீர் பாட்டில்கள், ரொட்டிகள், பிஸ்கட், கடலை மிட்டாய், பால் பவுடர் , சேமியா பாக்கெட் மற்றும் மிக்சர் உட்பட ரூ.3.46 லட்சம் மதிப்பீட்டிலான  நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மத்திய மண்டல அலுவலகத்திலிருந்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe