மகளின் தற்கொலைக்கு காதலன் தான் காரணம் என எண்ணி கொலை செய்த பெண்ணின் தந்தை மற்றும் மகன்- கோவையில் பரபரப்பு...

published 3 hours ago

மகளின் தற்கொலைக்கு காதலன் தான் காரணம் என எண்ணி கொலை செய்த பெண்ணின் தந்தை மற்றும் மகன்- கோவையில் பரபரப்பு...

கோவை: கோவை துடியலூரில் மகள் தற்கொலைக்கு காதலன் தான் காரணம் எனக்கருதி தந்தை மற்றும் மகன் ஆகியோர் தனியார் மருத்துவமனை ஓட்டுநர் தமிழ்செல்வன் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். துடியலூர் போலீசார் உடலை கைப்பற்றி  விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தந்தை மகன் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை துடியலூரில் உள்ள லட்சுமி மருத்துவமனையில் நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகன் 27 வயதான தமிழ்ச்செல்வன் கடந்த ஒரு வருடமாக டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய அம்மாவிற்கு சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அய்யன் கொல்லகொண்டான் கிராமம் ஆகும்.

இந்த கிராமத்திற்கு தமிழ்ச்செல்வன் அடிக்கடி சென்று வந்த போது அந்த பகுதியை சேர்ந்த மலைக்கனி என்பவரின் மகள் ஆனந்தி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தமிழ்ச்செல்வன் ஆனந்தியுடன் பழகிக் கொண்டிருக்கும்போதே திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஒரு பெண்ணையும் காதலித்து வந்துள்ளார்.

காத்துவாக்குல 2 காதல் பட பாணியில் டிரைவர் தமிழ்ச்செல்வன் 2 பெண்களை காதலித்துவந்துள்ளார். இதன் காரணமாக ஆனந்தியை திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆனந்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆனந்தி தற்கொலைக்கு தமிழ்ச்செல்வன் தான் காரணம் என்று ஆனந்தியின் அப்பா மலைக்கனி மற்றும் அண்ணன் ராஜாராம் ஆகியோர் முடிவு செய்து தமிழ்ச்செல்வனை கொலை செய்யும் நோக்கத்துடன் நேற்று 24ஆம் தேதி இருவரும் இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையத்திலிருந்து கோவைக்கு வந்துள்ளனர்.

இன்று காலை 10 மணி அளவில் துடியலூர் லட்சுமி மருத்துவமனை முன்பு வந்து நின்று கொண்டு தமிழ்ச்செல்வனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வரவழைத்து மருத்துவமனைக்கு அருகில் உள்ள காலி இடத்தில் வைத்து இருவரும் சேர்ந்து தமிழ்ச்செல்வனை கத்தியால் கழுத்தை அறுத்தும், மார்பு மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியும் கொலை செய்துவிட்டு வந்த இரு சக்கர வாகனத்திலேயே தப்பி சென்றுள்ளனர்,

அருகில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க அங்கு வந்து பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் போலீசார் இறந்து போன தமிழ்ச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட கத்தியையும் கைப்பற்றியுள்ளனர். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய தந்தை மகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe