அன்னூரில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த போலிசார்...

published 1 day ago

அன்னூரில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த போலிசார்...

கோவை: அன்னூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை 24 மணி நேரத்தில் கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜீத்குமார் என்பவர் கடந்த 22.11.2024 அன்று கோவை மாணிக்கம்பாளையம் அருகே உள்ள கம்பெனியில்  வேலை கேட்டபோது அவர்கள் மறுதினம் காலை வரும்படி கூறியுள்ளனர். அதன் பேரில் அஜீத்குமார் அருகில் உள்ள டீக்கடையில் காத்திருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் அஜீத்குமாரை  கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த சுமார் 6½ சவரன் தங்க நகையை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக அஜித்குமார் அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த  புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழிப்பறி வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்திரவிட்டதன் பேரில் , தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொந்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

அதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் (24), திவாகர் (19), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (20) மற்றும் மதுரை மாவட்டத்தைச்  முகேஷ்வரன் (19) ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து அவர்களை கைது செய்து சுமார் 6½ சவரன் தங்க நகையை பறிமுதல் செய்த போலிசார் நால்வரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் தயங்காமல் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe