கோகுலம் கார்டன் நிறுவனத்திடமிருந்து தங்களது பணத்தை மீட்டுத் தருங்கள்…

published 7 hours ago

கோகுலம் கார்டன் நிறுவனத்திடமிருந்து தங்களது பணத்தை மீட்டுத் தருங்கள்…

கோவை: கோவை டாடாபாத் பகுதியில் உள்ள கோகுலம் கார்டன் நிறுவனத்திடமிருந்து தங்களது பணத்தை மீட்டுத் தரக்கோரி 50க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், கோவை டாடாபாத் பகுதியில் உள்ள கோகுலம் கார்டன் நிறுவனத்தில் மாத தவணை முறையில் பணம் செலுத்தி வீட்டுமனை பெரும் ஒப்பந்தத்தின் கீழ் பணம் செலுத்தி வந்ததாகவும் இந்நிலையில், கோகுலம் கார்டன் நிறுவனத்தைச் சேர்ந்த தங்கராஜ் தற்போது வரை பணமாகவோ இடமாகவோ எதுவும் தரவில்லை என்றும் கூறினர்.

இந்நிலையில், தங்கராஜ் கைது செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் எனவே தாங்கள் செலுத்திய பணத்தை பணமாகவோ இடமாகவோ பெற்றுத்தர உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe