கோவையில் நடைபெற்ற டெக்ஸ்டைல் வாக்கத்தான்- பல்வேறு விதமான உடைகளை அணிந்து கொண்டு குழந்தைகள் பெண்கள் பேரணி...

published 2 days ago

கோவையில் நடைபெற்ற டெக்ஸ்டைல் வாக்கத்தான்- பல்வேறு விதமான உடைகளை அணிந்து கொண்டு குழந்தைகள் பெண்கள் பேரணி...

கோவை: கோயம்புத்தூர் விழா 17ம் பதிப்பில் ஒரு பகுதியாக மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் கோவையில் இயங்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி சார்பில் டெக்ஸ்டைல் வாக்கத்தான் நிகழ்ச்சி  பந்தயசாலை பகுதியில் நடைபெற்றது. 

இதில் அக்கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் என பலரும் பல்வேறு விதமான உடைகளை அணிந்து கொண்டு பேரணி மேற்கொண்டனர். 
இந்நிகழ்வை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய வானதி சீனிவாசன், டெக்ஸ்டைல் இல்லாமல் கோயம்புத்தூர் விழா நடைபெறாது என தெரிவித்தார். Handloom Day வை பிரதமர் தெரிவித்ததை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 7ஆம் தேதி கோவை மக்கள் சேவை மையம் சார்பில் Handloom Fashion Show வை நடத்தி வருவதாக கூறினார்.  இந்தியாவை உலக வல்லரசு நாடாக பிரதமர் மாற்றுகிறார் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல் எனவும் தெரிவித்தார். 

மேலும் பெண்கள் இல்லாமல் டெக்ஸ்டைல் ஏது?, ஆண்கள் வானவில்லில் ஏழு நிறங்களை தான் காண்பார்கள் ஆனால் பெண்கள் அந்த ஏழு நிறங்களில் ஏழு லட்சம் நிறங்களை கண்டறிந்து வெளிப்படுத்தக் கூடியவர்கள் என கூறினார். 

கோயமுத்தூர் காட்டனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பதாக தெரிவித்த அவர் கைத்தறி நிகழ்ச்சிகளுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் மத்திய அரசு சார்பில் என்னென்ன பாலிசிகள் உள்ளதோ அதை அனைத்தையும் தொடர்ந்து செய்து வருவதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe